search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"

    • ஜி-20 மாநாட்டில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைக்க உள்ளதாக தகவல்.
    • இந்திய வம்சாவளியினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்.

    பாலி:

    ஜி-20 கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று தொடங்குகிறது. இதில் அமெரிக்கா, சீனா உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு, பாலி நகர விமான நிலையத்தில் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


    இந்தோனேஷிய அமைச்சர்கள், அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர். மேலும் நடன கலைஞர்களும் வரவேற்பில் கலந்து கொண்டனர். பின்னர் விமான நிலையத்திற்கு வெளியேற திரண்டிருந்த இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்தார். அவர்கள் அருகே சென்ற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் மோடிக்கு ஆதரவாக உற்சாக குரல் எழுப்பினர். 


    முன்னதாக ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் உலகளாவிய வளர்ச்சியை மீட்டெடுத்தல், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக பேச்சு நடத்த உள்ளதாக கூறியுள்ளார்.

    இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக உலக தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகவும், ஜி20 மாநாட்டில், இந்தியாவின் சாதனைகளையும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டையும் தாம் எடுத்துரைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டின் கருப் பொருள் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை மையமாக கொண்டு அமைந்திருக்கும் என்றும், இது அனைவருக்கும் சமமான வளர்ச்சி, பகிர்ந்தளிக்கப்பட்ட எதிர்காலம் என்ற கருத்தை சுட்டிக்காட்டுவதாக அமையும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இதில் கலந்து கொள்ள ஜி20 நாடுகளின் உறுப்பினர்களையும், பிற அழைப்பாளர்களையும் தனிப்பட்ட முறையில் அழைக்க உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    • நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரடியாக சந்தித்து பேசுகிறார்.
    • மாநாடு நிகழ்வுகள் முடிந்து 16-ந்தேதி பாலியில் இருந்து மோடி நாடு திரும்புகிறார்.

    ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளையும் (15-ந்தேதி), நாளை மறுநாளும் (16-ந்தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் இந்தோனேசியா புறப்பட்டார்.

    ஜி-20 உச்சி மாநாட்டில் உலக பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம், உக்ரைன் விவகாரம் மற்றும் அதன் தாக்கம் குறித்து மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முக்கியமாக விவாதிக்க உள்ளனர்.

    உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் தொடர் பான 3 முக்கிய அமர்வுகளில் மோடி பங்கேற்க உள்ளார்.

    ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை டிசம்பர் 1 முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்தியா வகிக்க இருக்கிறது. எனவே பாலி மாநாட்டில் தலைமை பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வும் நடைபெறும். மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேசிய அதிபரிடம் இருந்து பிரதமர் மோடி தலைமை பொறுப்பை பெற்றுக் கொள்வார்.

    அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இதர நாடுகளின் தலைவர்களுக்கு மோடி இந்த மாநாட்டின் போது அழைப்பு விடுப்பார்.

    அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபபர் இமானு வேல் மேக்ரான், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஷோல்ஸ், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.

    நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரடியாக சந்தித்து பேசுகிறார். இது தவிர பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாலியில் பிரதமர் மோடி 45 மணி நேரம் செலவிட இருக்கிறார். அங்கு அவர் சுமார் 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இநதிய வம்சாவளியினர் பங்கேற் கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உளளார்.

    மாநாடு நிகழ்வுகள் முடிந்து 16-ந்தேதி பாலியில் இருந்து மோடி நாடு திரும்புகிறார்.

    இந்தோனேசியா புறப்பட்டு செல்லும் முன்பு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருந்ததாவது:-

    ஜி-20 தலைவர்களுடன் வளர்ந்து வரும் உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரி சக்தி பாதுகாப்பு, சுற்றுச் சூழல், சுகாதாரம், டிஜிட்டல் உருமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

    இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இதில் கலந்து கொள்ளும் பல நாட்டு தலைவர்களையும் நாள் நேரில் சந்திக்க உள்ளேன். இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகளின் வளர்ச்சிகள் பற்றி அவர்களுடன் மறு ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    உலகின் முக்கியமான வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்ட மைப்பு ஜி-20 ஆகும். இதில் அர்ஜென்டினா, ஆஸ்தி ரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    ×